Note : Please read in IE as Mozilla does not fully support tamil fonts.
Note 2: There might be a spell errors in the post, it was because the software did not completely help me or I was ignorant of some features. Forgive me for those.

“என்று தணியும் இந்த சுதந்திர தாகம்.
என்று மடீயும் இந்த அடீமையிண் மோகம்”

“என்ன தாத்தா அர்த்தம் இதுக்கு?” என்று மழலை குறையாமல் கேட்டாள் ஆனந்தி.
“பாரதியார் கவதை கண்ணா இது, நம்ம நாட்டை வெள்ளக்காரன் ஆட்சி பண்ண போ சுதந்திரத்துக்காக போராடின பல பேர்ல இவரும் ஒருத்தர்.
சுதந்திர உணர்வைி ஏற்றும் பாடல்கள் பல பாடினார்.இந்த வரிகள் முலமாக என்ன சொல்றார் நா , எப்போ நம்ம நாட்டு மக்களுக்கு
வெள்ளைக்காரணிடம் இருந்து சுதந்திரம் கிடைக்கும். எப்போ நம் மக்கள் அடிமையா இல்லாம ,நாம்
நினைத்தால் எதை வேண்டு மென்றாலும் சாதிக்கலாம் என்று நம்புவார்கள், என்று கேட்பது போல பாடியுள்ளார்.
சுருக்ம்மா சொல்லணும்னா நாம் யாருக்கும் அடிமை இல்லை. இந்தியா போல் ஒரு நாட்டில் பிறக்க பெருமைப்பட
வேண்டும். எப்பொழுதும் தலை நிமிர்து நடக்கவேண்டும் என்று சொல்றார். புரியறதா செல்லம்” என்று எடுத்து சொன்னார் தாத்தா ஸ்ரீநிவாசன்.
——-
“டேய் ஸ்ரீநிவசா, இதெல்லாம் நோக்கே நன்னா இருக்கா? இப்படி இந்த குடும்ப மானத்தை வாங்கறியே? நம்ம ஆத்த்ல யாருமே சிறைக்கு போனதே இல்ல.இப்படி எல்லாம் பண்ணி உங்க தொப்பானாரோட பெற கெடுகரிய.
தொரை கிட்ட வேல பண்ணரவர் உன் அப்பா. ஏன் தான் இப்படி எல்லாம் நடந்துகரியோ? என்று கதறினாள் ஸ்ரீநிவாசநின் தாயார்.

“பிறந்த தாய் நாட்டிற்காக சிறைக்கு செல்வது அவமானம் இல்லை அம்மா. அது பெரும் பெருமை. நாளை நாம்
சுதந்திரம் பெற்ற பிறகு மார்தட்டி கொண்டு சொல்லலாம் நீ, உன் பிள்ளையும் அதற்கு ஓர் காரணம் என்று. அது சாகா புக்ழ் அம்மா. அப்பா வெள்ளையனிடம் வேலை செய்து நமக்கு சேர்த்த இழிவை நான் துடைக்கிறேன் என்று எண்ணி பெருமை கொள். அடிமையாகவாழும் வாழ்க்கை கூட ஒரு வழக்கை தானா? ” என்று சீறினான் அவன் தாய் இடம்.

“நம்ம வாழ்க்கைக்கு என்ன டா குறைச்சல். எல்லா சுகமும் இருக்கு. மிச்சவா மாதிரி கஷ்ட படமா சண்தோஷமா தானே டா இருக்கோம்? என் தான் இப்படி எல்லாம் பேசற?” சொன்னாள் அம்மா

“எதை அம்மா சந்தோஷம் என்கிறாய்? இந்த அடிமை வாழ்வையா? நம்மை மண்ணை விட கேவலமாக நடத்துகிறான் நம் நாட்டை ஆள்பவன் .நம் நாட்டில் கொட்டிக்கிடக்கும் எல்லா வளத்தையும் அவன் நாட்டிற்காக பயன்படுத்திக்கொண்டு நம்மை அடிமையாக்கி வைத்தூரிக்கிறான். எதை அம்மா சந்தோஷம் என்கிறாய்?

நம்மோடு பிறந்து வளர்தவர்கள் அவதிப்படுவதை பார்த்து கொண்டு எப்படி அம்மா நிம்மதியாக இருக்க முடியும். நீ பிறந்த தாய் மண்ணை ஒருவன் அவமதித்து, அதில் முளைத்த முத்துக்கள் ஆகிய நமது சகோதரர் சகோதரிகளை அடிமை படுத்தி வைத்திருப்பதை கண்டு உன் இரத்தம் கொதிக்க வில்லாயா? இப்படி பட்டவனிடம் உழைத்து அதில் இருந்து உண்ணும் உணவும் ஒரு உணவா? அதற்கு சிறைச்சாலைல் கிடைக்கும் களி்கூட ருசியாக உள்ளதம்மா .” என்றான் ஸ்ரீநிவாசன்.
——
“யேன் தாத்தா அப்பாவை இன்னும் காணோம்? என்றாள் ஆனந்தி.
“வந்து விடுவார் இன்னும் கொஞ்ச நேரத்துல” என்றான் ஸ்ரீநிவாசன் கடிகாரத்தை பார்த்தபடி.
“ஷாந்தி , ஏனம்மா இன்னும் மொஹன்னை காணோம்? ரொம்ப நாழி ஆறது.” என்றான் ஸ்ரீநிவாசன் மருமகளிடம்.
“என்ன பா புதுசா கேக்கரீங்க. அவருக்கு இப்போ ப்ராஜெக்ட் முடியற சமயம். இது வேற அந்த வெள்ளக்காரன் ப்ராஜெக்ட் இல்லயா, அவா சமயமும் நம்ம சமயுமும் வேற இல்லயா. அதனால லேட் ஆகும் அப்பா. என்ன பண்றது. நல்ல
சம்பளம் தாரா,ஆனா அதுக்கு ஏத்த மாதிரி மாடா உழைக்கவேக்கரா. ” என்று பொலம்பிநாள் ஷாந்தி.

“அப்படி எண்ணமா வேலை, மாற்றாணின் இஷ்டத்துக்கு தலை வணங்கி இராப்பாகலா நேரம் காலம் இல்லாம வேல பண்ணனுமா?” என்றான் ஸ்ரீநிவாசன்.

“எனக்கும் அப்படி தான் தோன்றது ஆனா என்ன பண்ண முடியும். இந்த வேலை இருக்கறதாலதான் இவளோ நன்னா வாழ முடியும். இந்த வீடு, கார், நிலம், ஆனந்திக்கு நல்ல ஸ்கூல், நாளைக்கு காலேஜ் எல்லாம் இருக்கு இல்லயா? பொறுத்துக்க வேண்டியதுதான் அப்பா” என்றாள் ஷாந்தி.

ஆனந்தி கவிதையை வாஸித்தாள்.

“என்று தணியும் இந்த சுதந்திர தாகம்.
என்று மடீயும் இந்த அடீமையிண் மோகம்”

பாரதியை எண்ணி வியந்தான் ஸ்ரீநிவாசன். எப்படி இவ்வளவு தீர்க்கதரிசியாக இருந்தானோ?
சுதந்திரம காகிதத்தில் மட்டும் தான் பெட்ரொம்போல் ,வாழ்க்கையில்அல்ல.

“நீ படிக்க வேண்டியது அல்ல மா இது, உன் அப்பாவிடம் போய் அர்த்தம் கேள்” என்றான் ஸ்ரீநிவாசன் ,இன்னும் ஒரு சுதந்திர போர் எப்பொழுது துவங்க போகிறது என்று எண்ணி.