கண்ணும் கண்ணும் சேரவில்லை. ஊட்டி, கோடை,இமய மலை, அமெரிக்கா சென்று டூயட் பாடவில்லை,சில்க் சட்டை இல்லை, ஆயிரங்கள் மதிப்புடைய மெலிதான ஆடைகள் இல்லை.ஜாதி சண்டைகள் இல்லை. செல்வாக்கும் இல்லை.மகன், மகளை ஏமாற்றும் பெற்றோர்கள் இல்லை. சுயநலம் கருதி தீங்கு செய்யும் தம்பி தமக்கையரும் இல்லை.கண்ணால் காணாத காதல் இல்லை, தொலைபேசியில் மட்டுமே பேசும் காதலும் இல்லை, குரலின் மீது உள்ள காதல் இல்லை.இருவருக்கும் புற்றுநோயும் இல்லை. கள்ள கடத்தல் செய்யும் மாமாக்கள் இல்லை.

இருந்தது எல்லாம் அன்பு மட்டும் தான். அந்த மூன்றெழுத்து மட்டும் இவ்வனைத்தையும் எளிதாக கண் இமைக்கும் நொடிக்குள் வென்றது.உண்மையில் இருப்பதெல்லாம் அன்பு தான்

வருகிறேன் ஆஷா என்றான் ஆகாஷ் கன்னத்தில் முத்தமிட்டபடி செய்கைகளில்.

புன்னகையை பதிலாய் அளித்தாள்அவள்.

“சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை ……” என்ற பாடல் வரிகள் அவர்கள் தொலைக்காட்சிகளில் இருந்து ஒலித்தது.